கடத்தல் விவகாரத்தில் மோதல் அபாயம்: மாணவியின் அண்ணன் உள்பட மேலும் 3 வாலிபர்கள் கைது
தர்மபுரி அருகே மாணவி கடத்தல் விவகாரத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இது தொடர்பாக மாணவியின் அண்ணன் உள்பட மேலும் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சமூக விரோத கும்பல் ஊடுருவலை தடுக்க 29 இடங்களில் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 30-ந் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனி அம்பேத்கர்நகரை சேர்ந்த 23 வயது வாலிபர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரும், கல்லூரி மாணவியும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, மாணவியை அந்த வாலிபர் கடத்தி சென்று இருக்கலாம் என தகவல் பரவியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பினரிடையே மோதல் உருவாகும் அபாயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் நல்லம்பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டுகள் தயாரித்ததாக நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனி புதுநகர் பகுதியை சேர்ந்த சீனு (வயது21), லோகநாதன்(32) மற்றும் 20 வயது வாலிபர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 61 பெட்ரோல் குண்டுகளை போலீசார் கைப்பற்றி அவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில் நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனி புதுநகரை சேர்ந்த விஜயன்(60) என்பவர் அதியமான்கோட்டை போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் நல்லம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்த ரவிக்குமார் என்ற செம்புலி(25), மாணவியின் அண்ணன் விஜய்விஸ்வநாதன்(25), அரவிந்த்(21) ஆகிய 3 பேர் கடந்த 31-ந் தேதி ஆதிதிராவிடர் காலனிக்கு வந்து மாணவி குறித்து கேட்டதாகவும், அப்போது அவர்கள் குடிபோதையில் ரகளை செய்து அங்குள்ளவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் என்றும் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமார் என்ற செம்புலி, விஜய்விஸ்வநாதன், அரவிந்த் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.
நல்லம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்தவர் சுசீலா(52). இவர் நல்லம்பள்ளி தெற்கு ரெயில்ரோடு அருகில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு மாடுகளை மேய்க்க சென்றார். அப்போது ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த ஒருவர் சுசீலாவின் புடவையை பிடித்து இழுத்து தகாத வார்த்தையால் திட்டினார். இதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து அங்கு வந்ததும் அந்த நபர் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து அதியமான்போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவரை போலீசார் கைது செய்யவில்லை.
எனவே நேற்று மாலை 6 மணியளவில் வன்னியர் தெருவில் பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விவசாய நிலங்களுக்கு பெண்கள் சென்று வர போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், ஆதிதிராவிடர் காலனி அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்க செல்லும் மாணவிகளை அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் கேலி-கிண்டல் செய்வதை தடுக்க வேண்டும், பள்ளிக்கூடம் அருகில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசாரும், வருவாய்த்துறையினரும் அங்கு சென்று தர்ணா போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து பெண்கள் இரவு 7 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனிடையே சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சமூக விரோத கும்பல்கள் ஊடுருவுவதை தடுக்க நல்லம்பள்ளியை சுற்றிலும் 29 இடங்களில் வாகன சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் ஊருக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது. போலீசார் நேற்று 3-வது நாளாக தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பாதுகாப்பு பணிகளை மாவட்ட வருவாய் ஆய்வாளர் சங்கர், உதவி கலெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
இந்தநிலையில் காதல் ஜோடியினர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் மூலம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இது நல்லம்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story