கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி திருவாரூரில் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
கடந்த ஆண்டு வழங்கப்படாமல் உள்ள கல்வி உதவித்தொகையை உடன் வழங்க வேண்டும். கல்லூரியில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கல்லூரிக்கு நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து இருந்தனர். அதன்படி நேற்று மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி தலைவர் அருண் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் மதன், நகர செயலாளர் சுர்ஜித், கல்லூரி செயலாளர் சத்தியசீலன், மாவட்ட துணை செயலாளர் கவிநிலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story