மகதாயி பிரச்சினையில் காங்கிரஸ் தான் நாடகமாடுகிறது ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு


மகதாயி பிரச்சினையில் காங்கிரஸ் தான் நாடகமாடுகிறது ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Jan 2018 2:30 AM IST (Updated: 3 Jan 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

மகதாயி பிரச்சினையில் காங்கிரஸ் தான் நாடகமாடுகிறது என்று ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு,

மகதாயி பிரச்சினையில் காங்கிரஸ் தான் நாடகமாடுகிறது என்று ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம்சாட்டி உள்ளார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

தொலைபேசியில் கூட பேசவில்லை

மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக சித்தராமையா அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், கோவா மாநில அரசை நாங்கள் சம்மதிக்க வைப்பதாக சொன்னோம். அதேபோல் கோவா காங்கிரஸ் தலைவர்களை கர்நாடக காங்கிரசார் சம்மதிக்க வைப்பதாக உறுதியளித்தனர். அதன்படி நாங்கள் கோவா அரசை ஒப்புக்கொள்ள வைத்து இருக்கிற£ம்.

ஆனால் வாக்குறுதிப்படி கோவா காங்கிரஸ் தலைவர்களுடன், கர்நாடக காங்கிரசார் பேசவில்லை. கோவா காங்கிரசாருடன் சித்தராமையாவோ அல்லது நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீலோ குறைந்தபட்சம் தொலைபேசியில் கூட பேசவில்லை. மகதாயி பிரச்சினையை தீர்க்காமல் அப்படியே வைத்து அரசியல் நடத்தலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.

சித்தராமையா நிறுத்த வேண்டும்

மகதாயி பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தான் நாடகமாடுகிறது. இந்த பிரச்சினையில் பா.ஜனதா நாடகமாடுகிறது என்று விமர்சிப்பதை சித்தராமையா நிறுத்த வேண்டும். குடிநீருக்கு தண்ணீர் தருவதாக கோவா முதல்–மந்திரி கூறி இருக்கிறார். இதை கண்டித்து அங்குள்ள அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. காங்கிரஸ் கட்சியும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது.

மகதாயி பிரச்சினை கடந்த 35 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் முன்வர வேண்டும் என்று கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் கூறி இருக்கிறார்.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.


Next Story