திண்டிவனத்தில் பிளஸ்–1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை, 2 பேர் கைது


திண்டிவனத்தில் பிளஸ்–1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை, 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jan 2018 2:30 AM IST (Updated: 3 Jan 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் பிளஸ்–1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலைக்கு தூண்டியதாக ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் கைது.

திண்டிவனம்,

திண்டிவனம் அய்யந்தோப்பு எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் பிரியா (வயது 17). இவர் முருங்கப்பாக்கத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரியா, விட்டிலாபுரத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு வருவதற்காக திண்டிவனம் காந்திசிலை அருகே நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவில் ஏறினார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்களான காளி(30), குருசாமி(28) ஆகியோர் சேர்ந்து பிரியாவை கேலி செய்ததாக தெரிகிறது.

 இதுகுறித்து அவர் தனது தந்தையிடம் தெரிவித்தார். மேலும் மனமுடைந்த பிரியா, அதே பகுதியில் உள்ள தனது மாமா வீட்டு மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 இதுகுறித்த புகாரின் பேரில் ரோ‌ஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக காளி, குருசாமி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story