நவிமும்பையில் வாலிபரை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
நவிமும்பையில் வாலிபரை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தானே,
நவிமும்பையில் வாலிபரை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சண்டைநவிமும்பை ரபாலேயில் கடந்த மே மாதம் 4–ந் தேதி அந்த பகுதியை சேர்ந்த வாலிபரின் திருமண விழாவையொட்டி மஞ்சள்பூசும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது கணேஷ் ராம்சிங் (வயது32) என்பவரும், சன்னி அர்ஜூன் (30) என்பவரும் எதிர்பாராதவிதமாக ஒருவர் மீது ஒருவர் மோதி விட்டனர். இதில் இருவருக்கும் இடையே பயங்கர சண்டை உண்டானது.
ஆயுள் தண்டனைநிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். பின்னர் கணேஷ் ராம்சிங் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு கையில் பெட்ரோல் கேனுடன் வந்த சன்னி அர்ஜூன் அதை கணேஷ் ராம்சிங் மீது ஊற்றி தீயை கொளுத்தி போட்டார்.
இதில் படுகாயம் அடைந்த கணேஷ் ராம்சிங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சன்னி அர்ஜூனை கைது செய்து தானே மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றவாளி சன்னி அர்ஜூனுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.