தற்கொலை செய்து கொண்ட பெண் போலீசின் காதலன் தூக்கில் தொங்கினார் புத்தாண்டு தினத்தில் விபரீத முடிவு
தற்கொலை செய்து கொண்ட பெண் போலீசின் காதலன் புத்தாண்டு தினத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
தற்கொலை செய்து கொண்ட பெண் போலீசின் காதலன் புத்தாண்டு தினத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண் போலீஸ் தற்கொலைமும்பை நய்காவ் ஆயுதப்படை போலீசில் பெண் போலீசாக பணிபுரிந்து வந்தவர் மஞ்சு கெய்க்வாட் (வயது22). இவர் போய்வாடா பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் மகனான முகேஷ் (25) என்பவரை கடந்த 4 வருடமாக காதலித்து வந்தார்.
இந்த நிலையில் மஞ்சு கெய்க்வாட் கடந்த நவம்பர் மாதம் 28–ந் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் முகேஷ் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் பெண் போலீஸ் மஞ்சு கெய்க்வாட் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
காதலன் தற்கொலைஇதையடுத்து அவர் மீது மஞ்சு கெய்க்வாட்டை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். புத்தாண்டு தினமான நேற்றுமுன்தினம் முகேஷ் எங்கும் வெளியில் செல்லமால் வீட்டில் இருந்தார். அவரை தேடி நண்பர்கள் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது வீட்டில் முகேஷ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக போய்வாடா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முகேஷ் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.