ஏ.சி ரெயிலில் ஓசிபயணம் செய்து பிடிபட்ட ஆசிரியர், பெண் டிக்கெட் பரிசோதகரிடம் தகராறு


ஏ.சி ரெயிலில் ஓசிபயணம் செய்து பிடிபட்ட ஆசிரியர், பெண் டிக்கெட் பரிசோதகரிடம் தகராறு
x
தினத்தந்தி 3 Jan 2018 4:00 AM IST (Updated: 3 Jan 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு தினத்தில் ஏ.சி ரெயிலில் ஓசிபயணம் செய்து பிடிபட்ட ஆசிரியர் பெண் டிக்கெட் பரிசோதகரிடம் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

புத்தாண்டு தினத்தில் ஏ.சி ரெயிலில் ஓசிபயணம் செய்து பிடிபட்ட ஆசிரியர் பெண் டிக்கெட் பரிசோதகரிடம் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசிபயணம்

மும்பையில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் விராரில் இருந்து சர்ச்கேட் நோக்கி ஏ.சி. மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் ஓசிபயணம் செய்தவர்களை பிடித்து அபராதம் வசூலிக்கும் பணியில் பெண் டிக்கெட் பரிசோதகர் சரோஜினி என்பவர் ஈடுபட்டிருந்தார்.

ரெயில் பயந்தர் வந்த போது, ஒரு பயணியின் டிக்கெட்டை வாங்கி அவர் பரிசோதித்தார். இதில் அவர் வசாய்ரோடு வரை பயணிப்பதற்காக மட்டுமே டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

வழக்குப்பதிவு

எனவே வசாய் ரோட்டை தாண்டி ரெயிலில் ஓசிபயணம் செய்ததால் அவரிடம் அபராதம் செலுத்தும்படி சரோஜினி கூறினார்.

ஆனால் அவர் அபராதம் செலுத்த மறுத்து, டிக்கெட் பரிசோதகரிடம் தகராறு செய்தார். மேலும் தனது செல்போனில் அவரை படம் பிடித்து ‘வாட்ஸ்அப்’ குரூப்களில் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏ.சி. மின்சார ரெயிலில் பரபரப்பு உண்டானது. இதுபற்றி சரோஜினி ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பயணியை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மும்பை கார் பகுதியை சேர்ந்த ஆசிரியர் பாஸ்கர் ஜெய்ஸ்வார் (வயது33) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story