கரும்புக்கான நிலுவை தொகையை வழங்கக்கோரி சர்க்கரை ஆலை அருகே 11-ந்தேதி போராட்டம்
கரும்புக்கான நிலுவை தொகையை வழங்ககோரி எறையூர் சர்க்கரை ஆலை அருகே வருகிற 11-ந்தேதி மறியல் போராட்டம் நடத்தப் படும் என கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், பெரம்பலூர் அருகே எறையூரிலுள்ள பொதுத்துறை சர்க்கரை ஆலை நிர்வாகம் 2 ஆண்டு நிலுவை தொகை ரூ.31 கோடியே 93 லட்சத்தை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கக்கோரி ஆலை அருகேயுள்ள தேசியநெடுஞ்சாலையில் வருகிற 11-ந்தேதி மறியல் போராட்டம் நடத்துவது, மத்திய-மாநில அரசுகள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கிட வேண்டும்.
மேலும் வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடாது, வயலுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பால் இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், 2 ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வரதராஜன், பொருளாளர் செல்வராஜ் மற்றும் ஆறுமுகம், அகமதுபாஷா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story