கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதம்
வார்டு மறுவரையறைதொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டம் வருகிற 5-ந்தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி, ஒன்றியக்குழு, கிராம ஊராட்சி வார்டுகள், 2 நகராட்சிகள், 2 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளை வார்டு வாரியாக மறுவரையறை செய்யப்பட்ட பட்டியலை கடந்த வாரம் கலெக்டர் லட்சுமிபிரியா வெளியிட்டார். இது சம்பந்தமாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கும், கருத்துரு பட்டியலில் ஆட்சேபனை தெரிவிக்க 2-ந்தேதி இறுதிநாளாக அறிவிக்கப்பட்டு அதற்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதில் பங்கேற்க அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் நடந்த அறைக்கு வந்து மாலை 3 மணியளவில் காத்திருந்தனர். ஆனால் 1 மணி நேரத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. வார்டு மறுசீரமைப்பு செய்ததற்கான கருத்துரு பட்டியல் நகலும் அரசியல் கட்சியினரிடம் கொடுக்கப்படவில்லை.
இதனால் அ.தி.மு.க.வை தவிர தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் அனைவரும் அங்கிருந்து வெளியேறி கலெக்டர் அலுவலக முன்புற பகுதியில் அனைவரும் ஒன்று கூடி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் உலகநாதன் தலைமையில், அதிகாரிகளையும்-தமிழக அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் அரை மணி நேரம் அங்கேயே நின்றிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி தலைமையில், போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
அதன் பிறகு அனைவரும் கூட்டரங்கிற்கு சென்றனர். அங்கு மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, ஊராட்சிகள் துணை இயக்குனர் பழனிசாமி, தேர்தல் அலுவலர் லதா ஆகியோர் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது. அப்போது அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தங்க.பிச்சமுத்து மற்றும் கட்சியினர் மனு கொடுப்பதற்காக அதிகாரிகளை நோக்கி வந்தனர். இதையறிந்த மற்ற அனைத்து கட்சி பிரமுகர்களும் கூட்டத்தை நடத்த கூடாது. எங்களுக்கு முறையான அழைப்புகள் கொடுக்கப்படவில்லை. வார்டு மறுசீரமைப்பு குறித்த கருத்துரு நகல் வழங்கப்படவில்லை. இதனால் வார்டுகள் பிரிக்கப்பட்ட விவரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. 3 நாட்களுக்கு முன்பு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் எங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்க இயலாத சூழல் உள்ளது. எனவே கருத்துரு நகலை வழங்கி 6 ஒன்றியத்திலும் கூட்டத்தை நடத்துங்கள். அப்போது அந்தந்த பகுதியில் தங்களது வார்டு பிரிவு குறித்து சாதக-பாதகமான கருத்துக்களை தெரிவிப்பார்கள் என கூறி அதிகாரிகளின் முன்பு நின்று கூட்டத்தை நடத்தவிடாமல் கோஷம் எழுப்பினர்.
போலீசார் வந்து சமாதானம் செய்த பின்னர் அனைத்து கட்சியினருக்கும் கருத்துரு நகல் வழங்கப்பட்டு வருகிற 5-ந்தேதி ஆட்சேபனை குறித்து மனு கொடுக்கும் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி அறிவித்தார். இதனையடுத்து அனைத்து கட்சியினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story