எம்.ஜி.ஆர். ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் இந்தியாவுக்கு வழிகாட்டியாக உள்ளது
எம்.ஜி.ஆர். ஆட்சியில் தமிழகத்தில் நிறை வேற்றப்பட்ட திட்டங்கள் இந்தியாவுக்கு வழி காட்டியாக உள்ளது என்று, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தை 1981-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். தமிழ்ப்பல்கலைக்கழக நிறுவனரான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். தனது கருணை மிகுந்த செயல்களால் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளார். எம்.ஜி.ஆர். என அன்புடன் அழைக்கப்பட்ட அவர் 1977-ம் ஆண்டு முதல் 87-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட உன்னதமான திட்டங்கள் இந்தியாவுக்கு வழிகாட்டியாக உள்ளது. இதில் சத்துணவு திட்டம் முக்கியமான திட்டமாகும். மிக சிறிய வயதில் அவர் பசியின் கொடுமையை அனுபவித்ததும், வாழ்க்கை நடத்துவதற்காக பள்ளி படிப்பை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும் தான் அவரை அந்த திட்டத்தை கொண்டு வர தூண்டியது.
எனவே சத்துணவு மட்டுமின்றி இலவச சீருடை, காலணி, பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுவதை உறுதி செய்தார். இதனால் பள்ளிகளில் பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. பள்ளிக்கல்வியில் தமிழகம் சிறந்த நிலையை அடைந்தது. சத்துணவு திட்டம் வேறு பல நன்மை களையும் விளைவித்தது. அனைத்து சாதி குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உணவு அளிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு இடையே சாதிபாகுபாடு ஒழிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான படித்த, படிக்காத பெண்களுக்கு வேலை கிடைத்தது.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தை தஞ்சையில் அமைத்ததற்காக எம்.ஜி.ஆரை பாராட்டுகிறேன். இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவினர் 30 முதல் 40 ஏக்கர் நிலம் தேவை என பரிந்துரை செய்தனர். ஆனால் ஆயிரம் ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர். வழங்கினார். தமிழ்நாடு என்ற எழுத்தில் கட்டிடங்களை வடிவமைத்துள்ளார். பாராளுமன்ற வடிவில் நூலகத்தை கட்டியுள்ளார். பெண்கள் முன்னேற்றத்திலும் அவர் ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் தான் நம் நாட்டில் முதல்முறையாக பெண்களுக்கு பல்கலைக்கழகத்தை கொடைக்கானலில் தொடங்கி வைத்தார்.
மத்தியஅரசுடன் இணக்காமான உறவு வைத்து கொண்டு ஈழத்தில் வாழ்ந்த தமிழர்களின் நலனை காக்க அவர் ஆற்றிய பங்கு அனைவரும் அறிந்தது. விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தினார். தலைவர்கள், கல்வியாளர்களுக்கு சிலை வைப்பது சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்கை போற்றுவதற்கு மட்டுமல்ல அவர்களை எடுத்துக்காட்டாக கொண்டு இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் எம்.ஜி.ஆரின் பன்முக தன்மை என்ற நூல் வெளியிடப்பட்டது. விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு, பரசுராமன் எம்.பி., கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் வரவேற்றார். முடிவில் பதிவாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story