தொழில் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை வேலைக்காரருக்கு வலைவீச்சு
தொழில் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை போனது. இது தொடர்பாக அவரது வீட்டு வேலைக்காரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
மும்பை,
தொழில் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை போனது. இது தொடர்பாக அவரது வீட்டு வேலைக்காரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை பணம் மாயம்
மும்பை வெர்சோவாவில் உள்ள பிளாசா கட்டிடத்தில் வசித்து வருபவர் சமீம் கேர்மான். தொழில் அதிபர். இவர் சம்பவத்தன்று வீட்டை பார்த்து கொள்ளும்படி வேலைக்காரரிடம் கூறிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
வேலைக்காரர் காணாமல் போயிருந்தார். அறையில் சென்று பார்த்த போது, அங்குள்ள பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தன.
வேலைக்காரருக்கு வலைவீச்சு
அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த சமீம் கேர்மான் சம்பவம் குறித்து வெர்சோவா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வீட்டு வேலைக்காரர் தான் நகை, பணத்தை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவானது தெரியவந்தது. போலீசார் அந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story