ரெயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலை


ரெயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலை
x
தினத்தந்தி 3 Jan 2018 11:57 AM IST (Updated: 3 Jan 2018 11:57 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படும் கட்டுமான நிறுவனம் இர்கான். இந்த நிறுவனம் ரெயில்வேக்கு தேவையான கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதுடன் சர்வதேச அளவிலான பொதுத்துறை கட்டுமான நிறுவனமாகவும் விளங்குகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் இணைப் பொது மேலாளர், டெபுடி மேலாளர், ஜூனியர் என்ஜினீயர், மேலாளர், ஏ.இ., ஜூனியர் என்ஜினீயர், ஜூனியர் என்ஜினீயர் (எஸ் அண்ட் டி) போன்ற பணிகளுக்கு 59 பேரை தேர்வு செய்ய உள்ளது.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் டிப்ளமோ படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.ircon.org இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 5-1-2018-ந் தேதியாகும்.

Next Story