நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 460 அப்ரண்டிஸ் பணி
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப்படுகிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்கள், பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத்தீவு பகுதியினர் விண்ணப்பிக்கலாம்.
டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கு 250 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பட்டதாரிகளுக்கான பயிற்சிப் பணியிடங்களுக்கு 210 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் போன்ற பிரிவில் பட்டப் படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதியின் தர வரிசைப்படி தகுதியானவர்கள் பயிற்சிக்கு சேர்க்கப்படுவார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் www.nlcindia.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 5-1-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர், இணையதள விண்ணப்பத்தை குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும். நகல் விண்ணப்பம் 10-1-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story