பட்டதாரிகளுக்கும், வேலைவழங்கும் பள்ளிப் புத்தகங்கள்
வேலையில்லா பட்டதாரிகளாக வலம் வருவோரின் எண்ணிக்கை ஏராளம். ஒப்பந்தத் தொழிலாளியைவிட குறைந்த வருவாயில் வேலை பார்க்கும் என்ஜினீயர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படியாவது நிரந்தர பணிவாய்ப்பான அரசு வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்பது இளைஞர்களின் கனவாக உள்ளது. அதற்காக பட்டப்படிப்பு படித்திருந்தாலும், அவர்கள் மீண்டும் ஒருமுறை பள்ளிப் பாடப்புத்தகங்களை படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். குரூப்-4 உள்ளிட்ட டி.என்.பி. எஸ்.சி. தேர்வுகளுக்கு பெரும்பாலும் பள்ளிப் பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதுதான் இதற்கு முக்கியக் காரணம். சரியான வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் பள்ளிப் பாடப்புத்தகத்தை மீண்டும் ஒரு முறை படிக்கலாம்...
இன்றைய புத்திக்கூர்மையான இளைய சமுதாயத்தினருக்கு ஏற்ற வகையில் பள்ளிப் பாடப்புத்தகங்களில் சமீப காலமாக தரம் உயர்த்தப்பட்டு தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு புத்தகத்தின் முன்னுரை பக்கமும், படிப்பவர்களின் ஆவலையும், திறனையும் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அந்த துறையில் சிறந்து விளங்கும் அரசு கல்வி மையங்கள் பற்றிய தெளிவு கொடுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக இயற்பியல் புத்தகத்தில் இயற்பியல் துறையில் முன்னணியில் இருக்கும் பெங்களூரு இந்திய அறிவியல் மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையம், இந்திய வானியல் மற்றும் வான் இயற்பியல் மையம் ஆகியவை பற்றிய தகவல்கள் இடம் பெறுகிறது.
அது மட்டுமல்லாமல் அரசுத் தேர்வை நடத்தும் அமைப்பு, பள்ளிப் பாடப்புத்தகத்தில் இருந்தே பெரும்பாலான கேள்விகள் இடம் பெறும் என்று அறிவித்துவிடுவதால், தேர்வுக்கு தயாராகுபவர்களும், ஆசிரியர்களும், போட்டித் தேர்வு பயிற்சி யாளர்களும் அதிகம் குழப்பம் அடைய தேவை யில்லை.
மேலும் பள்ளிப் புத்தகங்கள் ஏற்கனவே படித்த பாடங்களாக இருப்பதால், மீண்டும் நினைவூட்டுவதுபோல படிப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அதிக மன அழுத்தம் இல்லாமலே தேர்வுக்கு தயாராக முடியும்.
பாடப்புத்தகங்கள் மற்றுத் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில், வழிகாட்டி புத்தகங்களும் நிறைய வெளிவருவது தேர்வு எழுதுபவர்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கிறது. தேடலை சுலபமாக்குகிறது.
பத்திரிகைகளும், பயிற்சி வகுப்பு நடத்துபவர்களும் ஏராளமான வினாவிடைகளை தொகுத்து பருவ இதழ்களாக வெளியிடுவதும் தொடர்கிறது.
இன்றைய அறிவியல் சார்ந்த பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்கள் எந்த இடத்தில் வாழ்வுடன் தொடர்பு உள்ளது என்பதையும் தெளிவுபடுத்தி பாடங்களும், அறிமுகமும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
பள்ளிப் பாடப்புத்தகங்கள் 66 குழுக்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும், 15 முதல் 20 நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் இடம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடப்புத்தகத்தில் இருக்கும் தகவல்கள், திரும்ப வராத வகையிலும், தகவல் திருட்டுகள் நடைபெறாத வண்ணமும் கண்காணிக்கப்படும் சிறப்பு மென்பொருட்களின் துணையுடன் உருவாக்கப்படுகின்றன. இதனால் ஒரே மாதிரியான விஷயங்கள் தவிர்க்கப்பட்டு, நேர்த்தியான முறையில் புத்தகங்கள் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தரம் மற்றும் வேலை உலகப் போட்டிகளால் பள்ளிப்புத்தகங்களுக்கு மவுசு ஏற்பட்டிருப்பது உண்மை. அதனால் பள்ளிப் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று தேடுபவர்கள் அதிகம். அவர்கள் பழைய புத்தகக் கடைகளுக்கு படையெடுக்க வேண்டிய அவசியமில்லை. பக்கத்துவீட்டில் படிக்கும் மாணவர்களிடம் இரவல் கிடைக்குமா? என்றும் ஏங்க வேண்டியதுமில்லை. இணையத்தில் எல்லாம் கிடைப்பதுபோல அரசுப் பள்ளி புத்தகங்களும் பி.டி.எப். கோப்பாக எளிதில் டவுன்லோடு செய்யும் வகையில் கிடைக்கிறது. http://www.textbooksonline.tn.nic.in/ என்ற இணையதளம் சென்றால் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்துப் பாடநூல்களையும் அழகிய வண்ண வடிவமைப்பில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

Related Tags :
Next Story