தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே கவர்னர் ஆய்வு நடத்துகிறார் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே கவர்னர் ஆய்வு நடத்துகிறார் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2018 4:30 AM IST (Updated: 4 Jan 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே கவர்னர் ஆய்வு நடத்துகிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

செம்பட்டு,

தமிழகத்தில் எது நடந்தாலும் அதன் பின் புலத்தில் பாரதீய ஜனதா கட்சி இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அ.தி.மு.க. அரசு, 2 ஜி வழக்கு தீர்ப்பு ஆகியவற்றிலும் பா.ஜ.க. பின்புலம் இருப்பதாக கூறுகிறார்கள். இப்போது ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததில் பா.ஜ.க. பின்புலம் இருப்பதாக கூற ஆரம்பித்து உள்ளார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. யாருடைய பின்புலத்திலும் இருக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை.

தமிழகத்தில் கால் ஊன்றி விடுவோமோ என்ற பயத்தில் சிலர் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு சரியாக செயல்படுத்தவில்லை. ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிவாரணங்களும், ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் தமிழக அரசு சரியாக பயன்படுத்த வில்லை. மத்தியில் 3½ ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் ஆட்சியை பிடிக்க அசுர வேகத்தோடு பணியாற்றி கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் தாக்கத்தை பா.ஜ.க. ஏற்படுத்தும்.

இவ்வாறு கூறினார்.

பின்னர் நடிகர் ரஜினிகாந்த் பாபா முத்திரையில் தாமரை சின்னம் அகற்றப்பட்டது குறித்த கேள்விக்கு, “தாமரை வெற்றியின் சின்னம். அது எங்களது சின்னம். 19 மாநிலங்களில் தாமரை தான் ஆட்சி செய்கிறது” என்று கூறினார்.

புதுக்கோட்டையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அனைத்து இடங்களிலும் போட்டியிட்டு மிகபெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும். கவர்னர் ஆய்வின்போது விவசாயிகள் கருப்புகொடி காட்டுவது தவறான உதாரணம். ரஜினியும் ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையும் நாங்கள் மக்களிடம் கொண்டு செல்வோம். ஆன்மீக அரசியல் எடுபடுமா என்பது முக்கியமல்ல. கவர்னர் ஆய்வு செய்வதே கவர்னர் ஆட்சி செய்வதாக கருதக் கூடாது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கவர்னர் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தான் ஆய்வு நடத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், “ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஊழல் நடந்திருப்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் பெற்றுள்ளார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

Next Story