உள்ளாட்சி வார்டுகள் மறுசீரமைப்பு: ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் நீட்டிப்பு கலெக்டர் தகவல்

உள்ளாட்சி வார்டுகள் மறுசீரமைப்பு: ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் நீட்டிப்பு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Jan 2018 2:00 AM IST (Updated: 4 Jan 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ளாட்சி வார்டுகள் மறுசீரமைப்பு குறித்து பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக, கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ளாட்சி வார்டுகள் மறுசீரமைப்பு குறித்து பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக, கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

வார்டுகள் மறுசீரமைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வரைவு பட்டியல் கடந்த மாதம் 27–ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த வரைவு பட்டியல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் ஆட்சேபனைகளை 2–ந் தேதி வரை தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டது.

காலஅவகாசம் நீட்டிப்பு

இந்த நிலையில் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. வருகிற 5–ந் தேதி மாலை 5 மணி வரை பொதுமக்கள், தங்கள் ஆட்சேபனைகளை எழுத்துப்பூர்வமாக மறுசீரமைப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story