மத பிரசாரத்தை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது
மதபிரசாரத்தை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக்கோரி மறியல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டறம்பள்ளி,
நாட்டறம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் தினமும் ஜெப பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். கடந்த சில மாதமாக அருகில் வசிக்கும் மக்களை பாதிக்கும் வகையில் அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஒலிபெருக்கி மூலமாக பாடல்கள் பாடி ஜெபம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் பிற மதத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தாசில்தாரிடம் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று வருவாய்துறையினரை கண்டித்தும், அமைதியான சூழ்நிலை ஏற்படுத்திதர வேண்டும் என்றும், கட்டாய மத பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஒன்று திரண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்து, நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்களை விடுதலை செய்யக்கோரி நாட்டறம்பள்ளி - ஜோலார்பேட்டை ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்த 27 பேரை ஆலங்காயத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story