பெட்ரோல், டீசல் விரைவில் ஜி.எஸ்.டி.வரம்பிற்குள் வரும் எச்.ராஜா பேட்டி
பெட்ரோல், டீசல் விரைவில் ஜி.எஸ்.டி.வரம்பிற்குள் வரும் என பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
ஆம்பூர்,
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று ஆம்பூருக்கு வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நிர்வாகத்தை புரிந்து கொள்வதற்கும், பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மாவட்ட நிர்வாகத்திடம் கவர்னர் கலந்தாலோசித்து வருவது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதிகார வரம்புக்கு உட்பட்டே கவர்னர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆனால் இதனை மக்கள் முகம் சுளிக்கும் வகையில் தி.மு.க.விமர்சனம் செய்வதும், கருப்பு கொடி காட்டுவதும் சிறுபிள்ளைதனமாக உள்ளது.
தி.மு.க.வின் செயல்தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அந்த கட்சிக்கு இறங்குமுகமாக உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 18 கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் தி.மு.க. டெபாசிட் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் முறைகேடுகளை சுட்டிக்காட்டி வருகிறேன். காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தர் விக்ரகம் செய்வதற்கு 5¾ கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு குண்டு மணியளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்கு செலவு என கூறி பல பொதுமக்களிடம் நன்கொடை வசூலிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி மட்டுமே கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நன்கொடைக்கு ரசீதும் போடப்படுவதில்லை. அந்த அளவுக்கு முறைகேடு நடந்து வருகிறது.
தொடர்ந்து தமிழக அரசு அறநிலையத்துறை கோவில்களை அழிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதற்கு நிர்வாக தகுதியின்மையே காரணம். அதனால் கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும். இந்துகளுக்கு மத சுதந்திரம் இல்லை. வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வகிப்பதுதான் மத சுதந்திரம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அதன் கட்சி நிர்வாகிகளையும் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களால் இந்து கோவில்களுக்கு ஆபத்து ஏற்படும். ஆன்மிகம் இல்லாத திராவிட கட்சிகளின் அரசியல் இருக்கும்போது ரஜினியின் ஆன்மிக அரசியல் ஏன் இருக்ககூடாது. அதனால் ரஜினியின் ஆன்மிக அரசியலை வரவேற்கிறோம்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை விரைவில் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வரும். நதிகள் மாநில பட்டியலில் இருக்கின்றது. பொதுப்பட்டியலில் அவை கொண்டு வரப்பட்டால் தான் மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிகளை இணைக்க முடியும்.
‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள், எரிவாயு இணைப்பு, வீடு கட்டும் திட்டம் ஆகிய மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம். இந்தியாவிலேயே அதிக ‘ஸ்மார்ட் சிட்டி’ வழங்கப்பட்டது தமிழ்நாட்டிற்குதான். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 நகரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் மாநில அரசு அத்திட்டத்தை செயல்படுத்துவதில் அக்கறை காட்டாமல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் கொ.வெங்கடேசன், மாவட்ட பொதுச்செயலாளர் வாசுதேவன், செயற்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், ஜெயந்திமாலா, ஆனந்தன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story