வேதாரண்யம் அருகே இலங்கையை சேர்ந்த படகு கரை ஒதுங்கியது
வேதாரண்யம் அருகே இலங்கையை சேர்ந்த படகு கரை ஒதுங்கியது. மேலும் புதரில் மறைத்து வைக்கப்பட்ட என்ஜின்- மண்எண்ணெய் கேன் மீட்கப்பட்டது.
வேதாரண்யம்,
இலங்கையில் இருந்து மர்மகும்பல் போதை பொருட்களை நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கடத்தல் கும்பல் தீவிர கண்காணிப்பையும் மீறி படகு மூலம் வேதாரண்யத்துக்கு வருகிறார்கள். இந்தநிலையில் வேதாரண்யம் அருகே மணியன்தீவில் நேற்று காலை 6 மணியளவில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கி நின்றது. நீண்ட நேரமாக படகு நின்றதால் அங்கிருந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த படகில் ஏறி சுற்றி பார்த்தனர். அந்த படகில் என்ஜின் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து மர்மபடகு குறித்து அவர்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்மபடகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் பைபர் படகு இலங்கையை சேர்ந்தது என்றும், போதை பொருள் கடத்தல் கும்பல் வந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.
என்ஜின்
பின்னர் தீவு அருகே உள்ள காட்டில் கடலோர காவல் படையினர் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு புதரில் படகு என்ஜின் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த என்ஜின் 75 எச்.பி. சக்தி கொண்டதாகும் என்று கூறப்படுகிறது. பின்னர் சிறிது தூரம் சென்று பார்வையிட்ட போது அங்கு 3 கேன்கள் இருந்தன. அதில் மண்எண்ணெய்களும், ஆயிலும் இருந்தன. இதையடுத்து என்ஜினையும், 3 கேனையும் கைப்பற்றி மர்மகும்பல் பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் நாகையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலோர காவல் குழும சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குலோத்துங்கராஜா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் தீவிரவாதிகளா? அல்லது போதை-தங்க கடத்தல் கும்பலா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய இலங்கையை சேர்ந்த படகால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story