ரூ.3 கோடியில் முட்டல் ஏரி மேம்படுத்தப்படும் கலெக்டர் ரோகிணி தகவல்
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் முட்டல் ஏரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் இயற்கை அழகை கண்டுகளிக்கும் வகையில் ஒரே சுற்றுலாதலமாக ஏற்காடு விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் அங்கு சீசன் உள்ளபடியால், சுற்றுலா பயணிகள் கோடைகாலம் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் ஏற்காடு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அடுத்ததாக ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாடி முட்டல் ஏரி மற்றும் அருவியை சுற்றுலாதலமாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முட்டல் ஏரி, முட்டல் அருவி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கரடுமுரடான பாதையில் தடுப்பு கம்பியை பிடித்தவாறு நடந்து சென்று அப்பகுதிகளில் கலெக்டர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஆத்தூர் கோட்ட வன அலுவலர் பெரியசாமி, உதவி கலெக்டர் செல்வம், திட்ட அலுவலர் சுந்தரம்(பழங்குடியினர் நலன்) உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சேலத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஏற்காட்டினை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதற்கு ஏதுவாக தொடர்புடைய அலுவலர்களுடன் ஏற்காட்டில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்தபடியாக ஆத்தூர் தாலுகா ஆனைவாடி முட்டல் சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் வனத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முட்டல் பகுதிக்கு சுமார் 2 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எழில்மிகு ஆனைவாடி முட்டல் ஏரி மற்றும் அருவியை கண்டுகளிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய படிப்படியாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
முதற்கட்டமாக கல்லாநத்தம் முதல் முட்டல் வரை 3½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு குடில்கள் அமைக்கப்பட உள்ளது. முட்டல் ஏரியிலிருந்து முட்டல் அருவி வரை சாலை வசதி உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
குறிப்பாக பகுதிநேர மருத்துவம், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் சுத்தமாக இப்பகுதியை மேம்படுத்தவும் தேவையான ஆலோசனைகள் தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனைவாடி முட்டல் சுற்றுலாதலத்தை ரூ.3½ கோடியில் மேம்படுத்தும் சூழ்நிலையில் அவற்றின் பயன்கள் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு சென்ற கலெக்டர் ரோகிணி, அங்கு வளாகத்தில் அமர்ந்திருந்த மாணவ-மாணவிகளுக்கு சிறிது நேரம் பாடம் நடத்தினார். மேலும் மாணவ-மாணவிகளிடம் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். தரமாக சாப்பாடு வழங்கப்படுகிறதா? என்றும், தினமும் முட்டை கிடைக்கிறதா? என்றும் கேட்டார். மேலும் படித்து என்னவாகப்போகிறீர்கள்? என்றும், லட்சியத்துடன் படிக்க வேண்டும் எனவும் கலெக்டர் ரோகிணி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இடிந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக சிறுவாச்சூர் ஊராட்சி அலுவலகம் எதிரில் நடந்த தூய்மை பாரதம் விழிப்புணர்வு கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வம், தாசில்தார்கள் முத்துராஜா, அன்புசெழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தழகு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆத்தூர் ஒன்றியம் கல்லாநத்தம் ஊராட்சியில் தனிநபர் இல்லக்கழிப்பறை விழிப்புணர்வு தொடர்பாக நடந்த நிகழ்ச்சியிலும் கலெக்டர் ரோகிணி பங்கேற்றார்.

Related Tags :
Next Story