பீமா– கோரேகாவ் வன்முறையின் போது ராகுல் பலியானது எப்படி? உருக்கமான தகவல்
பீமா– கோரேகாவ் வன்முறையின் போது வாலிபர் ராகுல் பலியானது பற்றிய உருக்கான தகவல்கள் தெரியவந்து உள்ளது. வன்முறையில் வாலிபர் சாவு பீமா– கோரேகாவ் வன்முறை சம்பவத்தின் போது, ராகுல் என்ற 28 வயது அப்பாவி வாலிபர் பலியானார். ராகுலின் இந்த துயர மரணம் அவரது குடும்பத
புனே,
பீமா– கோரேகாவ் வன்முறையின் போது வாலிபர் ராகுல் பலியானது பற்றிய உருக்கான தகவல்கள் தெரியவந்து உள்ளது.
வன்முறையில் வாலிபர் சாவுபீமா– கோரேகாவ் வன்முறை சம்பவத்தின் போது, ராகுல் என்ற 28 வயது அப்பாவி வாலிபர் பலியானார். ராகுலின் இந்த துயர மரணம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
வன்முறையின் போது ராகுல் எப்படி இறந்தார் என்பது குறித்த உருக்கமான தகவல் தற்போது தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:–
போர் நினைவு தின கொண்டாட்டத்தில் இரு சமூகத்தினரும் பயங்கரமாக மோதி கொண்டிருந்த கடந்த திங்கட்கிழமை அன்று மதியம், ராகுல் சனஸ்வாடி பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்து உள்ளார்.
அப்போது தான் வன்முறையில் ஈடுபட்டிருந்த யாரோ ஒருவர் வீசிய கல் அவர் மீது விழுந்து மண்டை உடைந்து உள்ளது. இதில், அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைகுலைந்து கீழே விழுந்து உள்ளார்.
தண்டிக்க வேண்டும்இதில், ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சசூன் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அன்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராகுல் உயிரிழந்தது பற்றி அவரது தந்தை பாபாஜி பதங்கலே கண்ணீருடன் கூறியதாவது:–
எனது இளைய மகனை இழந்து விட்டேன். அவனுடன் நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். முறையான விசாரணை நடத்தி, வன்முறையில் ஈடுபட்டு எனது மகன் சாவுக்கு காரணமான அனைவரையும் தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.