சிவசேனா பவன் முன் கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்கள் போலீசார் விரட்டியடித்தனர்
முழு அடைப்பு போராட்டத்தின் போது, சிவசேனா பவன் முன் சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
மும்பை,
முழு அடைப்பு போராட்டத்தின் போது, சிவசேனா பவன் முன் சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
சிவசேனா பவன்பீமா– கோரேகாவ் வன்முறை சம்பவத்தை கண்டித்து மும்பையில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது, சாலைகளை மறித்த போராட்டக்காரர்கள் தாங்கள் சார்ந்த அமைப்பு மற்றும் கட்சிகளின கொடிகளை இருசக்கர வாகனங்களில் பறக்க விட்டபடி சென்றனர்.
மாலை 5 மணியளவில் 10–க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிளில் போராட்டக்காரர்கள் சுமார் 25 பேர் ஆவேசமாக கோஷங்கள் எழுப்பியபடி தாதர் சிவசேனா பவன் அருகே வந்தனர்.
விரட்டியடிப்புசிவவேனா பவன் முன்பு வந்ததும், அங்கு நின்று கொண்டு சர்ச்சைக்குரிய வகையில் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் உண்டானது.
இதை கவனித்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கோஷம் எழுப்பியவர்களை விரட்டி அடித்தனர். மேலும் சிவசேனா பவன் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அங்கு சிவசேனா கட்சியினர் திரண்டதால் பரபரப்பு உண்டானது.