அரியாங்குப்பத்தில் ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
அரியாங்குப்பம்
புதுச்சேரி அரசு நலவழித்துறை, அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் ‘ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி’ அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது. கண்காட்சியை ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். திருபுவனை ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத டாக்டர் ராமன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆயுர்வேத பிரிவு திட்ட அதிகாரி புருஷோத்தமன், அரியாங்குப்பம் ஆரம்ப சுகதார நிலைய மருத்துவ அதிகாரி ரவிவர்மன், மதுமிதா ஆகியோர் நோக்கவுரையாற்றினார்கள்.
இதில் நீரழிவு நோய், ரத்த சோகை நோய்கள் வராமல் தடுப்பதற்கான உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, மணவெளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக அரியாங்குப்பம் ஆரம்ப சுகதார நிலைய ஆயுர்வேத டாக்டர் லாவண்யா வரவேற்றார். ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் தமிழ்செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அபிஷேகப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத டாக்டர் டயானா, அரியாங்குப்பம் ஆரம் சுகாதார நிலைய ஆய்வாளர் பன்னீர்செல்வம், பாரதியார் பல்கலைக்கூட இசைத்துறை பேராசிரியர்கள், சுய உதவிகுழு பெண்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார உதவியாளர் கமலா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story