குற்றங்கள் நிகழாமல் தடுக்க வழி
‘ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் சட்டம்–ஒழுங்கைப் பராமரிக்க 222 காவல் துறையினர் இருக்கவேண்டும் என்பது ஐ.நா.வின் பரிந்துரை.
‘ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் சட்டம்–ஒழுங்கைப் பராமரிக்க 222 காவல் துறையினர் இருக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் பரிந்துரை. ஆனால், இந்தியாவில் 131 காவலர்கள்தான் இருக்கிறார்கள். காவலர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் புலன்விசாரணைக்கும், ரோந்து பணிக்கும் போதுமான காவலர்கள் அனுப்பப்படுவது இல்லை. அதனால், காவல் துறையின் அடிப்படை கடமையான சட்டம்– ஒழுங்கைப் பராமரித்தல், குற்றத்தடுப்பு பணிகள் போன்றவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மேலும், தினசரி பணியைக் கவனிக்கப் போதுமான காவலர்கள் இல்லாததால், காவல் துறையினரின் பணிச்சுமை அதிகரிக்கிறது. அதன் காரணமாக, காவலர்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு, பொது மக்களிடம் தங்களது கோபத்தை அவ்வப்பொழுது வெளிப்படுத்துவதாக உளவியல் ஆய்வு ஒன்று தெரியப்படுத்துகிறது’ – என்பது சமீபத்தில் வெளியான செய்தி. காவலர்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துவிட்டால், நாட்டில் தினசரி நடைபெறும் குற்றங் கள் கணிசமான அளவுக்குக் குறைந்து விடுமா? சட்டம்–ஒழுங்கு சீரான முறையில் இருக்குமா? போன்ற கேள்விகள் குறித்து பார்ப்போம்.
வடக்கு மண்டல ஐ.ஜி.யாக 2012–2013–ம் ஆண்டில் நான் பணிபுரிந்தபொழுது, ஒரு பெண் என்னைச் சந்திக்க சென்னையில் அமைந்துள்ள ஐ.ஜி. அலுவலகத்திற்கு வந்தார்.
‘ஐயா, ஒரு மாதத்திற்கு முன்பு ஒருநாள் மாலை நேரத்தில் தெருவில் நான் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த இரண்டு நபர்களில் ஒருவன் என் கழுத்திலிருந்த தாலியுடன் கூடிய தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்று விட்டான். போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்தேன். ஆனால், இதுநாள் வரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. குற்றவாளிகளைப் பிடித்து, பறித்துச் சென்ற என் நகைகளையும் மீட்டுக் கொடுக்கவில்லை’–என்று போலீசார் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய அந்த பெண், தான் கொண்டு வந்திருந்த புகார் மனுவை என்னிடம் கொடுத்தார்.
‘இன்ஸ்பெக்டரைப் பார்க்க பலமுறை காவல் நிலையம் சென்றேன்; ஆனால் பார்க்க முடியவில்லை. எஸ்.பி. ஆபீசிலும் புகார் மனு கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அந்தப் பெண்.
சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த காவல் நிலைய ஆய்வாளரின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே எனக்கு சில புகார் களும் வந்திருந்தன. அவரது ஆசியுடன் ஒரு நெம்பர் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை சகஜமாக நடந்து வருவதாகவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் அவர் அதிகக் கவனம் செலுத்தமாட்டார் என்றும் தகவல்கள் எனக்கு வந்திருந்தன. எனவே, அந்த காவல் நிலையத்தை முறைப்படி ஆய்வு செய்ய தேதி குறித்தேன்.
அந்த காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் ஓரிரு வழக்குகளைத் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டன என்றும், அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட களவு போன பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டு, புகார்தாரர்களிடம் ஒப் படைக்கப்பட்டன என்றும் காவல் நிலைய ஆய்வின் பொழுது ஆய்வாளர் என்னிடம் கூறினார். அதற்கான ஆதாரங்களையும் என் பார்வைக்காகக் கொடுத்தார்.
காவல் நிலைய ஆய்வின் பொழுது அங்கிருந்த அந்த காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளரை அழைத்தேன். அவர் காவலராகப் பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று, குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். ‘உங்கள் காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பந்தப்பட்ட அனைத்து புகார் மனுக்கள் மீதும் முறைப்படி வழக்கு பதிவு செய்து, புலன்விசாரணை மேற்கொள்ளப்படுகிறதா? வழக்கு பதிவு செய்யப்படாத புகார் மனுக்கள் ஏதாவது உங்களிடம் உள்ளதா? அப்படி இருக்கும் புகார் மனுக்களை எடுத்து வாருங்கள்’–என்று குற்றப்பிரிவு உதவி ஆய்வாளரிடம் கூறினேன். மவுனமாக இருந்த அவர், குற்றப்பிரிவு ரைட்டரைப் பார்த்தார். காவல் நிலையத்தில் ‘ரைட்டர்’ என்று அழைக்கப்படுபவர் பொதுவாகத் தலைமைக் காவலராக இருப்பார். அவர்தான் காவல் நிலைய நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வருபவர்.
‘நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம். உங்கள் காவல் நிலையப் பகுதியில் கடந்த ஓராண்டு காலத்தில் நிகழ்ந்த திருட்டு, வழிப்பறி, வாகனத் திருட்டு போன்ற குற்றங்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்களில் வழக்கு பதிவு செய்யப்படாமல் ஏதாவது இருந்தால், அவைகளை என் பரிசீலனைக்காக எடுத்துக் கொண்டு வாருங்கள். அதேபோன்று, எழுத்து மூலமாகப் புகார் மனு கொடுக்காமல், வாய்மொழியாகப் புகார் தெரியப்படுத்தியிருந்தாலும், அந்த விவரங் களையும் என்னிடம் கூறுங்கள். இந்த காவல் நிலையத்தில் ஆண்டு தோறும் எவ்வளவு திருட்டுக்குற்றங்கள் நடைபெறுகின்றன? அவைகளைக் கட்டுப்படுத்த தற்பொழுது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை போதுமானதா? அல்லது வேறு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகத்தான் இன்று நான் வந்துள்ளேன்’–என்று குற்றப்பிரிவு உதவி ஆய்வாளருக்கும், அவரது ரைட்டருக்கும் தைரியம் ஊட்டும் வகையில் பேசினேன். நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறாமல், அவர்கள் இருவரும் ஆய்வாளரைப் பார்த்தனர். பின்னர், மவுனமாக நின்று கொண்டிருந்தனர்.
‘நீங்கள் இருவரும் காவல்துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்கள். ஒருசில ஆண்டுகளில் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளீர்கள். மவுனமாக இருப்பதால், பிரச்சினை தீர்ந்து விடாது. உங்கள் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட திருட்டு புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், சிலர் என்னிடம் நேரடியாகப் புகார் கொடுத்துள்ளனர். அது குறித்து ஆய்வு செய்ய, நான் கேட்ட விவரங்களை என் பரிசீலனைக்குக் கொடுக்காவிட்டால், உங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்’–என்று சற்று கண்டிப்புடன் கூறினேன்.
வழக்குப் பதிவு செய்வது குறித்து கடைப்பிடிக்கப்படும் உண்மை நிலவரத்தைத் தெரியப்படுத்தாமல், மவுனமாக இருந்தால், விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர், அவரது அறைக்கு விரைந்து சென்றார். அவரைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு ரைட்டரும் சென்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்த உதவி ஆய்வாளர், வழக்குப்பதிவு செய்யாமல் வைக்கப்பட்டிருந்த புகார் மனுக்களை என் பார்வைக்காகக் கொடுத்தார். அதில் தாலியுடன் கூடிய தங்கச் செயின் பறிப்பு, பூட்டிய வீட்டை உடைத்து திருடியது, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல வகையான திருட்டுக் குற்றங்கள் தொடர்பான புகார் மனுக்கள் இருந்தன. மேலும் ஒரு நோட்டில் எழுதி வைக்கப்பட்டிருந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பான வாய்மொழிப் புகார்களையும் உதவி ஆய்வாளர் என்னிடம் தெரியப்படுத்தினார்.
‘இவ்வளவு புகார் மனுக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது தானே?’–என்று காவல் நிலைய ஆய்வின்பொழுது உடனிருந்த டி.எஸ்.பி.யிடம் கேட்டேன். அவர் காவல் துறையில் பணிக்குச் சேர்ந்து ஓரிரு ஆண்டுகள்தான் ஆகியிருக்கும். ‘காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து புகார்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தால், மாதம் தோறும் பதிவு செய்யப்படும் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரிக்கும். அதேசமயம், கண்டுபிடிக்க முடியாத வழக்குகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கும். இதைத் தவிர்ப்பதற்காக, சில புகார் மீது வழக்குப் பதிவு செய்யாமல், நிலுவையில் வைத்துக் கொள்வோம். அந்த வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபட்டதும், வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்’ – என்று வழக்குப்பதிவுசெய்யாததற்கான விளக்கத்தை டி.எஸ்.பி. கூறினார்.
திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்ட பின்பும் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் பற்றி அந்த இளம் டி.எஸ்.பி.க்கு விளக்கிக் கூறினேன்.அதைத் தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குகளின் கோப்பைப் பார்வையிட்டதில், போலீசார் கையாண்ட ரகசியம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பல திருட்டு வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்.) ‘என்.பி.’ என்று (N.P-Non Professional) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, திருட்டைத் தொழிலாகக் கொண்டவர்களால் செய்யப்பட்ட திருட்டு குற்றம் அல்ல என்றும், பகை உணர்வு காரணமாக உள்நோக்கம் கொண்டு நிகழ்த்தப்பட்ட திருட்டு சம்பவம் என்ற அடிப்படையில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் ‘என்.பி.’ என்று குறிப்பிடுவது வழக்கம். அவ்வாறு பதிவு செய்யப்படும் திருட்டு வழக்குகளின் விவரங்களை மாதாந்திரத் திருட்டு வழக்குகள் பட்டியலில் சேர்க்க மாட்டார்கள்; அந்த வழக்குகள் போலீஸ் உயரதிகாரிகளின் மாதாந்திரக் குற்ற ஆய்வில் இடம்பெறாது. அதனால், அந்த வழக்குகளின் புலன் விசாரணை குறித்து போலீசார் அதிகமாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். சில சமயங்களில், திருட்டு புகார் கொடுத்தவரைத் திருப்திப்படுத்துவதற்காக அம்மாதிரியான வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் உண்டு.
ஆதாயத்திற்காகச் செய்யப்படும் திருட்டு சம்பவங்களை ‘என்.பி.’ வழக்குகளாகப் பதிவு செய்யப்படும் நடைமுறை அந்த ஒரு காவல் நிலையத்தில் மட்டும்தான் உள்ளதா? அல்லது வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ள 6 மாவட்டங்களிலும் உள்ளதா? என்று ஆய்வு செய்ததில் கிடைத்த விவரம் திகைப்படையச் செய்தது. ஓராண்டில் வடக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் குறித்து, பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு வழக்குகள் ‘என்.பி.’ வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவ்வாறு திருட்டு வழக்குகளை ‘என்.பி.’ வழக்குகள் எனப் பதிவு செய்வதினால், அந்த குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட திருட்டுக் குற்றவாளிகளில் பலர் காவல் துறையினரின் பார்வைக்கு வராமல், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்து விடுகிறது.
அந்த காவல்நிலை ஆய்வைத் தொடர்ந்து, நான் ஆய்வு மேற்கொண்ட மற்ற சில காவல் நிலையங்களிலும் கடந்த சில ஆண்டு களாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து திருட்டுக்குற்ற வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், களவு போன அனைத்து பொருட்களும் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து சில ஆண்டுகளாக காவல்நிலையங்களில் குற்றங்கள் கண்டுபிடிப்பதில் 100 சதவீத சாதனையை அடைய முடியுமா?
வளர்ந்து, விரிவடைந்து வரும் நகரங்களில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மை, உழைக்காமல் எளிதில் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை, வேலை தேடி பல்வேறு வடமாநிலங்களில் இருந்து அதிக அளவில் தமிழ்நாடு வருபவர்களின் செயல்பாடுகள், அறிவியல் வளர்ச்சி காரணமாகப் பெருகி வரும் ‘சைபர் குற்றங்கள்’, குற்ற வழக்குகளில் எளிதில் விடுதலை பெற்றுவிட முடியும் என்ற குற்றவாளிகளின் நம்பிக்கை போன்ற காரணங்களால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற நிகழ்வுகள் ஆண்டு தோறும் அதிகரித்து வருவதை உணரமுடிகிறது. ஆனால், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை இதைப் பிரதிபலிப்பதில்லை. காரணம் என்ன? காவல் நிலையங்களில் பெறப்படும் அனைத்து புகார்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்தால், குற்றங்கள் பெருகிவிட்டதாகக் காவல்துறை மீது கூறப்படும் விமர்சனம், ஒருமுக்கிய காரணமாக இருந்து வருகிறது. காவல் நிலையங்களில் பெறப்படும் அனைத்து புகார்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, முறையான புலன்
விசாரணை மேற்கொள்ளாமல், காவல் துறையினரின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்துவதால், குற்ற நிகழ்வுகள் கணிசமான அளவிற்குக் குறையாது என்பது பல இடங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அம்மாதிரியான செயல்பாட்டை நம் நாட்டு காவல் துறையும் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளும் நாளை விரைவில் நாம் எதிர்பார்ப்போம்.
நிறைவு பெற்றது.
வழக்குப்பதிவு அவசியம்
ஒரு காவல் நிலையப் பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி, அந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? செய்தித்தாள் களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட செய்தி வந்துள்ளதா? என்பது குறித்து உன்னிப்பாக கவனிப்பான்.
உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்யாவிட்டால், காவல் நிலைய பொறுப்பு அதிகாரி நிகழ்ந்த திருட்டு சம்பவத்தைப் பொருட்படுத்தவில்லை என்று கருதிஅதே பகுதியில் அடுத் தடுத்து திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் குற்றவாளிகள் ஈடுபடுவார்கள்.
உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து, சந்தேக நபர்களை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினால், போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க, திருட்டு குற்றவாளிகள் உடனடியாக அந்தப் பகுதியில் இருந்து தலைமறைவாகிவிடுவார்கள். அதன் விளைவாக, அடுத்தடுத்த திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாது.
போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றால் திருட்டு குற்றவாளிகள் பிடிபடுவதோடு, பிற இடங்களில் இருந்து திருட்டு குற்றவாளிகள் இந்த பகுதிக்கு இடம் பெயர்ந்து வரமாட்டார்கள்.

Related Tags :
Next Story