சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு தே.மு.தி.க.வினர் போராட்டம் பெண்கள் உள்பட 87 பேர் கைது


சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு தே.மு.தி.க.வினர் போராட்டம் பெண்கள் உள்பட 87 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2018 4:30 AM IST (Updated: 4 Jan 2018 11:04 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பெண்கள் உள்பட 87 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்காத தமிழக அரசு மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். அதன்படி தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.

போராட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பழனிவேலு தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் முகமதுஅலி, மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், பூபேஷ்குமார், மாவட்ட பொருளாளர்கள் செங்குட்டுவன், ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை ஒன்றிய செயலாளர் நடராஜ் வரவேற்றார். இதில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்க துணைத்தலைவர் கக்கரைசுகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில் நிலுவைத்தொகை வழங்காததை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் செல்வராசன், பாலுச்சாமி, தேவேந்திரன், சக்திவேலன், கணேஷ்காந்த், வள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அடைக்கலம், புஷ்பராஜ், பொதுக்குழு உறுப்பினர் மகேஷ்வரன், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர் லக்கிசெந்தில், மாவட்ட நிர்வாகி விஜய்ஆனந்த் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வல்லம் பேரூர் செயலாளர் மதியழகன் நன்றி கூறினார். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 87 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் மாவட்ட செயலாளர் பழனிவேல் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு 2 ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.28 கோடி உள்ளது. இந்த தொகை இந்த ஆண்டும் இதுவரை வழங்கப்படவில்லை. கரும்புக்கான நிலுவைத்தொகை வழங்காததால் கரும்பு சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிலுவைத்தொகையை உடனடியாக வழங்காவிட்டால் ஆலை முன் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும். ஆலையில் இணைமின் நிலைய பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடியவில்லை. இந்த பணிகளையும் விரைந்து முடித்து மின் உற்பத்தியை தொடங்க வேண்டும்’’என்றார்.


Next Story