கொசுக்கள் உற்பத்தியாகும் அளவுக்கு குப்பைகள் இருந்ததால் அபராதம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை


கொசுக்கள் உற்பத்தியாகும் அளவுக்கு குப்பைகள் இருந்ததால் அபராதம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Jan 2018 4:15 AM IST (Updated: 5 Jan 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் குப்பைக்கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டு இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.

ஆலந்தூர், 

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் ராமமூர்த்தி உத்தரவின்பேரில் ஆலந்தூர் மண்டல உதவி சுகாதார அதிகாரி டாக்டர் மல்லிகா தலைமையில் சுகாதார அலுவலர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் ஆலந்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஆலந்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் சென்னை மெட்ரோ ரெயில்வேயில் பணியாற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் ஆய்வு செய்தனர். அங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் குப்பைக்கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டு வந்த தனியார் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

Next Story