காதலித்து திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதலித்து திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Jan 2018 3:45 AM IST (Updated: 5 Jan 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் காதலித்து திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் உள்ள சதாசிவம் படையாச்சி தெருவை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மகன் பிரசாந்த் (வயது 21). இவர், திருப்பத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அங்கு உடன் படித்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரத்தை சேர்ந்த அயோத்தி என்பவரின் மகள் நிஷாந்தினியுடன் (19) பிரசாந்த் நெருக்கமாக பழகி வந்தார்.

நாளடைவில் பிரசாந்த்தும், நிஷாந்தினியும் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரசாந்த்தும், நிஷாந்தினியும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு பிரசாந்த் மட்டும் கூலி வேலை பார்த்து கொண்டே கல்லூரி படிப்பை தொடர்ந்து படித்து வந்தார். நிஷாந்தினி படிக்க செல்லவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்படவே, வாழ்க்கையில் வெறுப்படைந்த நிஷாந்தினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் திருப்பத்தூர் சப்-கலெக்டர் கார்த்திகேயனும் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story