தனியார் மெட்ரிக் பள்ளியில் ரூ.4½ லட்சம் திருட்டு


தனியார் மெட்ரிக் பள்ளியில் ரூ.4½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 5 Jan 2018 4:15 AM IST (Updated: 5 Jan 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

ரத்தினகிரியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஜன்னல் கம்பியை உடைத்து ரூ.4½ லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆற்காடு,

ரத்தினகிரியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊழியர்கள் பள்ளியில் உள்ள அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம் போல் பள்ளி அலுவலகத்தை திறந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பள்ளி முதல்வர் அறையின் பின்பக்கம் உள்ள ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு மேஜையில் வைத்திருந்த ஆவணங்கள் தரையில் சிதறி கிடந்தன. மேலும் மேஜையில் இருந்த அறைகள் திறக்கப்பட்டு கிடந்தன.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ரத்தினகிரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளி முதல்வர் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.4½ லட்சம் திருட்டு போனது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Next Story