தறிகெட்டு ஓடிய பஸ் மோதி கணவன்-மனைவி பலி


தறிகெட்டு ஓடிய பஸ் மோதி கணவன்-மனைவி பலி
x
தினத்தந்தி 5 Jan 2018 4:30 AM IST (Updated: 5 Jan 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மோதி கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே உள்ள கீழ்செண்டத்தூர் கிரா மத்தை சேர்ந்தவர் பிச்சை முத்து (வயது 45). இவரது மனைவி விமலா (40). கணவன்-மனைவி 2 பேரும் ஆம்பூரில் உள்ள ஒரு ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்ல கணவன்- மனைவி இருவரும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கி ளில் மேல்பட்டி வழியாக ஆம்பூருக்கு சென்று கொண்டி ருந்தனர்.

இந்த நிலையில் ஆம்பூரில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்ற தனியார் பஸ் அழிஞ்சிகுப்பம் அருகே பழுதாகி நின்றது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

பின்னர் பஸ் டிரைவர் கொத்தமாரிக்குப்பத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் பஸ்சை குடியாத்தத்தில் உள்ள பஸ் நிறுவனத்துக்கு ஓட்டி செல்ல முயன்றார். அப்போது இடதுபுறத்தில் செல்வதற்கு பதிலாக சாலையின் வலது புறத்தில் திருப்பினார். இதில் தாறுமாறாக தறிக்கெட்டு ஓடிய பஸ் சாலையின் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பிச்சைமுத்து, அவரது மனைவி விமலா இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அக்கம்பக்கத்தினர் விமலாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியி லேயே அவர் பரிதாபமாக இறந்தார். பிச்சைமுத்து வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

முன்னதாக பஸ்சானது சாலையோரம் இருந்த தென்னைமரத்தின் மீது மோதியதில் முன்பக்க கண் ணாடி உடைந்து சிதறியது. மேலும் அங்கிருந்த தென்னந் தோப்புக்குள் ஓடி நின்றது. உடனடியாக பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

விபத்தில் கணவன்-மனைவி இருவரும் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மேல்பட்டி - ஆம்பூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறந்த 2 பேருக்கும் தனியார் பஸ் நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும், பஸ் டிரைவர் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்த மேல்பட்டி போலீசார் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த விபத்து குறித்து மேல் பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த தம்பதிக்கு பிரவீன் (21), சதீஷ் (16) ஆகிய 2 மகன்களும், மகாலட்சுமி (19) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story