தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது பெண் சாவு: டாக்டர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்
திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது பெண் இறந்ததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்களை கைது செய்யக்கோரி பச்சிளம் குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி,
கரூரை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் கரூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 27) என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமிக்கு கடந்த 2-ந்தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை திருச்சி புத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் முத்துலட்சுமிக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து டாக்டர்கள், மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு முத்துலட்சுமியை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து முத்துலட்சுமி உடல் திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் திருச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு புகார் கொடுத்துவிட்டு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் முத்துலட்சுமியின் உறவினர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு கூடி, தவறான சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, முத்துலட்சுமிக்கு பிறந்த பச்சிளம் குழந்தையுடன் திடீரென்று ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்து, வாகனங்கள் சாலையில் வரிசையில் நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் பிரேத பரிசோதனை செய்து, அதில் ஏதாவது தவறு என்று தெரிந்தால் மட்டும் தான் கைது செய்ய முடியும். எனவே மறியலை கைவிடுங்கள் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து முத்துலட்சுமியின் உறவினர்கள் கூறியதாவது:-
2-ந்தேதி பிரசவத்திற்கு சேர்த்த சிறிது நேரத்தில் குழந்தை பிறந்தது. அப்போது முத்துலட்சுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. அப்போது டாக்டர்கள் ரத்தப்போக்கு நிற்க வேண்டும் என்றால், கர்ப்பபையை அகற்ற வேண்டும் என்று கூறினர். அதற்கு நாங்கள் சம்மதித்தோம். அப்போது டாக்டர்கள் 27 யூனிட் ரத்தம் வேண்டும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து பலரிடம் இருந்து ரத்தம் பெற்று கொடுத்தோம். சிறிது நேரத்திற்கு பிறகு ரத்தம் நிற்கவில்லை என்று கூறி, மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத் தனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் நேற்று முன்தினம் காலை மீண்டும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து 2-வது முறையாக பலரிடம் ரத்தம் பெற்று கொடுத்தோம். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் இறந்து விட்டதாக கூறி முத்துலட்சுமியின் பிணத்தை கையில் கொடுத்தனர். டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் முத்துலட்சுமி இறந்தார். எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்போது முத்துலட்சுமியின் உறவினர்கள் பச்சிளம் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Related Tags :
Next Story