கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பயணிகள் அவதி
கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
கடலூர்,
13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே முடித்து, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய நிர்ணயம் செய்யக்கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் இதற்கான தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில் நேற்று போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சென்னையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையொட்டி பஸ்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கடலூர் பஸ் நிலையத்துக்கு தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல், சி.ஐ.டி.யு. பாஸ்கரன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பஸ்களை அந்தந்த பணிமனைகளில் நிறுத்தி விட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டனர்.
அதன்படி டிரைவர்கள், தாங்கள் ஓட்டி வந்த அரசு பஸ்களை அந்தந்த பணிமனைகளில் நிறுத்திவிட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த திடீர் போராட்டத்தால் கடலூர் பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பெரிதும் அவதி அடைந்தனர். அரசு பஸ்கள் ஓடாததால் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்ற அனைத்து தனியார் பஸ்களிலும் படிக்கட்டுகளில் நின்றபடி பொதுமக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது.
கிராமப்புறங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் என மாவட்டம் முழுவதும் உள்ள 11 பணிமனைகளிலும் பஸ்களை நிறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் 574 பஸ்கள் இயங்கவில்லை என்று கடலூர் மண்டல தொ.மு.ச. தலைவர் பழனிவேல் தெரிவித்தார்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கத்தினரும் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் மணி, தே.மு.தி.க. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ரகமத்துல்லா, சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் மூர்த்தி, பணிமனை செயலாளர் பிரபாதண்டபாணி உள்பட அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அரசு பஸ்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பயணிகளை ஏற்றி வந்த டிரைவர்கள், கண்டக்டர்களிடமும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி அவர்களும் பயணிகளை கீழே இறக்கி விட்டு பஸ்களை அந்தந்த பணிமனைக்கு கொண்டு சென்றனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு மேல் புதுச்சேரி, சென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர். ஆனால் கிராமப்புறத்திற்கு வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்களும் வழக்கம் போல் இயங்கின.
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு மேல் கிராமப்புறங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டனர். அதையடுத்து இரவு 8 மணிக்கு பிறகு கிராமப்புறங்களுக்கு டவுன் பஸ்களை ஊழியர்கள் இயக்கினர்.
இதேபோல் செஞ்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் உள்ளிட்ட இடங்களிலும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் அரசு பஸ்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story