வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் மீண்டும் முற்றுகை


வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் மீண்டும் முற்றுகை
x
தினத்தந்தி 5 Jan 2018 4:15 AM IST (Updated: 5 Jan 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் மீண்டும் முற்றுகை வார்டு மறுவரையறை பட்டியலை மாற்றக்கோரி நடந்தது

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் கோம்பைப்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் மேலப்பட்டி கிராமம் 2-வது வார்டு பகுதியில் உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை பட்டியலில், அந்த ஊராட்சியில் உள்ள 1, 2 மற்றும் 3-வது வார்டு பகுதிகளை பழைய வத்தலக்குண்டு ஊராட்சிக்கு மாற்றி அமைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் கடந்த 30-ந் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று, மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள், பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வார்டு மறுவரையறை பட்டியலை மாற்றம் செய்யவேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர். பின்னர் அவர் கள், மாவட்ட திட்ட அலுவலர் மலர்விழியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனர். 

Next Story