நவோதயா பள்ளிக்கு வாகன வசதி ராதாகிருஷ்ணன் எம்.பி. தொடங்கிவைத்தார்


நவோதயா பள்ளிக்கு வாகன வசதி ராதாகிருஷ்ணன் எம்.பி. தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 5 Jan 2018 3:10 AM IST (Updated: 5 Jan 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி வாகனத்தை ராதாகிருஷ்ணன் எம்.பி. கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி, 

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வெளியூர் செல்வதற்கு வசதியாக பள்ளிக்கூடத்துக்கு என்று சொந்தமாக வாகன வசதி வேண்டும் என்று பள்ளியின் முதல்வர் வெங்கடேஸ்வரன், புதுவை எம்.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் ராதாகிருஷ்ணன் எம்.பி., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் செலவில் பள்ளி வாகனம் வாங்க நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து புதிய வாகனம் வாங்கப்பட்டு, அதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராதாகிருஷ்ணன் எம்.பி. கலந்துகொண்டு பள்ளி வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பாபுராஜ் ஜெயின், விசாலாட்சி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Next Story