சிந்தனையை செதுக்கும் ‘லிகோ’
‘லிகோ’ செங்கலில் விதவிதமான உருவங்கள் செய்து விளையாடுவது உங்களுக்குப் பிடிக்குமில்லையா குட்டீஸ். உலக குழந்தைகளின் பொதுவான விளையாட்டுச் சாமான்களில் ஒன்றாக விளங்குவது லிகோ. அவ்வப்போது லிகோ செங்கற்கள் கொண்டு பிரமாண்டமான கட்டுமானங்கள், உருவங்கள் செய்யப்படுவது உண்டு.
தற்போது லிகோ கொண்டு நிரந்தரமான நினைவு இல்லத்தை லிகோ நிறுவனம் உருவாக்கி உள்ளது. லிகோவின் வரலாறு மற்றும் பெருமைகளை அசைபோடுவோமா...
* நெதர்லாந்தைச் சேர்ந்த ஓலே கிர்க் கிறிஸ்டியான்சென், இந்த லிகோ செங்கற்களை முதன் முதலில் உருவாக்கினார். சிறு சிற்பங்களை உருவாக்கி விற்பவராக விளங்கிய அவர், தற்செயலாக 1949-ல் லிகோ செங்கற்களை உருவாக்கி புகழ்பெற்றார்.
* லிகோ என்பது டேனிஸ் மொழியில் ‘லிக் கோட்’ என்ற இரு சொற்களின் முதல் இரு எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். அந்த சொற்களுக்கு ‘நன்றாக விளையாடுதல்’ என்று பொருளாகும். லத்தின் மொழியில் ‘லிகோ’ என்ற சொல்லுக்கு ‘நான் பொருந்துகிறேன்’ என்ற பொருளும் உண்டு.
* 52 விதமான வண்ணங்களில், 2 ஆயிரத்து 350 விதமான லிகோ செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன.
* ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி லிகோ செங்கல்கள் உருவாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நிமிடத்திற்கு 35 ஆயிரம் செங்கல்களும், ஒரு மணி நேரத்திற்கு 20 லட்சம் செங்கற்களும் பில்லண்ட் தொழிற்சாலையில் உருவாக்கப்படுகிறது.
* லிகோ செங்கற்களை பல லட்சம் வழிகளில் ஒன்றிணைக்க முடியும் என்று கணித நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது.
* ஒரு வருடத்தில் விற்பனையாகும் லிகோ செங்கற்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கினால் உலகை 5 முறை சுற்றிவிடும் அளவுக்கு இருக்கும்.
* உலகில் விற்பனையாகும் லிகோ செங்கற்களை ஒவ்வொரு மனிதனுக்கும் 62 என்ற எண்ணிக்கையில் பிரித்துக் கொடுக்கலாம்.
* உலக குழந்தைகள் ஆண்டு தோறும் 500 கோடி மணி நேரங்களை லிகோ செங்கற்களுடன் கழிப்பதாக கணக் கிடப்படுகிறது.
* 1949 முதல் இதுவரை சுமார் 500 பில்லியன் லிகோ செங்கல்கள் உருவாக்கப்பட்டிருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
* உலகம் முழுவதும் ஓராண்டில் 400 கோடி லிகோ உருவங்கள் உருவாக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
* லிகோ செங்கற்களைக் கொண்டு அவ்வப்போது பிரமாண்ட உருவங்கள் செய்து சாதனை நிகழ்த்தப்படுவது உண்டு. தற்போது லிகோவின் பெருமையை நிலை நாட்டும் வகையில், லிகோ நிறுவனம் இயங்கும் நெதர்லாந்தின் பில்லண்ட் நகரில், லிகோ கொண்டு நிரந்தர கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘லிகோ ஹவுஸ்’ எனப்படும் இந்த கட்டிடம் 12 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இரண்டரைக் கோடி லிகோ செங்கற்கள் இதை உருவாக்கத் தேவைப்பட்டன.
* வெறும் பார்வைக்காக அல்லாமல் சுற்றுலா மையமாக இந்த லிகோ கட்டிடம் எழுப்பப்பட்டிருக்கிறது. இதை உருவாக்குவதற்கு 4 ஆண்டுகள் பிடித்தது. லிகோ கட்டிடத்தில் கண்காட்சி அறையும், விளையாடும் அறைகளும் உள்ளன.
* டென்மார்க் நாட்டின் ராஜா பிரெடரிக், ராணி மேரி ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன் இந்த லிகோ கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். லிகோவின் 3-வது தலைமுறை நிர்வாகியான க்ஜெல்ட் கிரிக் கிஸ்டியான்சென் விழாவில் கலந்து கொண்டார்.
* பிஜார்க் இங்கெல்ஸ் குழு எனும் இந்த பிரமாண்ட லிகோ கட்டிடத்தை எழுப்பியது. முகப்புகளில் அழகிய வடிவம் வருவதற்காக பளிங்கு கற்கள் ஒட்டப்பட்டுள்ளன.
* கட்டிடத்தின் அடித்தளத்தில் 3 உணவு விடுதிகள் உள்ளன. மேலும் ஒரு லிகோ கடை, கருத்தரங்க வளாகம் மற்றும் பொழுதுபோக்கு வளாகம் உள்ளது.
* மேல்தளத்தில் புகழ்பெற்ற லிகோ படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு டைனோசர் உருவங்கள் பார்ப்பவர்களின் மனதை ஈர்க்கிறது.
* கட்டிடத்தின் உச்சியில் 8 விளக்குகள் இரவில் ஒளிவீசுகின்றன.
* குழந்தைகளும், பெரியவர்களும் லிகோ உருவங்களை செய்து பார்க்க இடம் உண்டு.
* ஆண்டுக்கு 2½ லட்சம் பார்வையாளர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளனர். பள்ளி குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
* இங்கு சுற்றுலா செல்ல விரும்பினால் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் லிகோ கட்டிடத்தை சுற்றிப் பார்த்து வாருங்களேன்!

Related Tags :
Next Story