தூத்துக்குடியில் துறைமுகம் சார்பில் மாரத்தான் போட்டி நாளை நடக்கிறது
தூத்துக்குடியில் வ.உ.சி. துறைமுகம் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வ.உ.சி. துறைமுகம் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாரத்தான் போட்டி
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ‘தூய்மையான பாரதம்‘ விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியினை வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஜெயகுமார் காலை 6.30 மணிக்கு பழைய துறைமுகம் முன்பு இருந்து தொடங்கி வைக்கிறார்.
போட்டியானது துறைமுக பள்ளி வளாகத்தில் வந்து முடிவடையும். போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சரக்கு கையாளும் பிரிவில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் பதிவு செய்யலாம்.
பரிசோதனை
போட்டியாளர்கள், தங்களது பெயர்களை பதிவு செய்யும் போதே சரக்கு கையாளும் பிரிவின் சமுதாய கூடத்தில் பணியில் உள்ள துறைமுக மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும். பெயர் பதிவு செய்த நபர்களுக்கு மட்டுமே எண் கொடுக்கப்படும். வெளியூர்களில் இருந்து வரும் போட்டியாளர்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பெயர் பதிவு செய்த போட்டியாளர்களுக்கு நாளை காலை 5 மணி முதல் 6 மணி வரை பழைய துறைமுகத்தில் பி- பிரிவில் டி-சர்ட் வழங்கப்படும்.
போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஜெயகுமார், நாளை காலை 8 மணிக்கு துறைமுக பள்ளி மைதானத்தில் வைத்து பரிசு வழங்குகிறார்.

Related Tags :
Next Story