ஈரோட்டில் ரெயில் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய ரெயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு,
அகில இந்திய ரெயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் சேலம் கோட்ட செயல் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஈரோடு கிளை தலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தார். மத்திய ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் ரோலி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
7–வது ஊதியக்குழுவின்படி அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும். ஓடும் ரெயில் தொழிலாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். ஈரோடு ரெயில்வே காலனியில் இருந்து வெளியே செல்லும் வழித்தடங்களை மூடக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ரெயில் ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story