திருப்பூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2018 3:00 AM IST (Updated: 6 Jan 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுசீலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பால்ராஜ், சாலை பணியாளர் நெடுஞ்சாலை துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் அம்சராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். பொங்கல் போனசாக ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சமையல் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு 9 மாத காலத்திட்டத்திற்கு துறை ரீதியாக ஆணை வெளியிட வேண்டும். 7–வது ஊதியக்குழு அறிவித்த ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் கருணாகரன் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


Next Story