கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். செயலாளர் வேலுச்சாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியத்தை நிலுவையுடன் வழங்க வேண்டும். சமையலர், உதவியாளர்களை முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இறுதியில் கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் வழங்கினர்.