அன்னூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


அன்னூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2018 3:00 AM IST (Updated: 6 Jan 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

அன்னூர்,

அன்னூர் ஒன்றிய கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆண்டுகளை 10–ல் இருந்து 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டார செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story