மங்களூருவில் தொண்டர் கொலை: பா.ஜனதா சார்பில் எடியூரப்பா தலைமையில் தர்ணா பெங்களூருவில் 8-ந் தேதி நடக்கிறது
மங்களூருவில் தொண்டர் கொலையானதை கண்டித்து பா.ஜனதா சார்பில் வருகிற 8-ந் தேதி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் தர்ணா போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்து உள்ளது.
பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ரவிக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
8-ந் தேதி தர்ணா
கர்நாடகத்தில் இந்து அமைப்பினர் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுகிறார்கள். இதை கண்டித்தும் மங்களூருவில் பா.ஜனதா தொண்டர் தீபக் ராவ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை கண்டித்தும் வருகிற 8-ந் தேதி பெங்களூருவில் பா.ஜனதா சார்பில் தர்ணா போராட்டம் கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடக்கிறது. இதில் கட்சி முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த 4 ஆண்டுகளில் இந்து அமைப்பினர் 24 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். ஆயினும் கொலையாளிகளுக்கு ஆதரவாகவே மாநில அரசு செயல்பட்டு வருகிறது. கார்வாரில் பரேஸ் மேஸ்காவை கொலை செய்து பிணத்தை ஏரியில் வீசினர். அந்த வழக்கிலும் சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை. இப்போது தட்சிணகன்னடா மாவட்டத்தில் எங்கள் கட்சி தொண்டர் தீபக் ராவ் கொலையிலும் தனிப்பட்ட காரணம் இருப்பதாக போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி கூறி இருக்கிறார்.
வாக்கு வங்கி அரசியல்
அவருடைய இந்த கருத்தின் பின்னணியில் கொலையாளிகளை பாதுகாக்கும் நோக்கம் இருக்கிறது. கடலோர மாவட்டங்களில் இந்து அமைப்பினர் கொலையில் ஒரு இஸ்லாமிய அமைப்புக்கு தொடர்பு இருக்கிறது. இது தெரிந்தும், போலீசாரை செயல்படவிடாமல் இந்த அரசு தடுக்கிறது. போலீசாரின் கைகளை அரசு கட்டி வைத்துள்ளது. நிலைமை கைமீறி சென்றாலும் அரசு இந்த விஷயத்தில் வாக்கு வங்கி அரசியலை நடத்துகிறது.
எனவே கர்நாடக அரசை கண்டித்து வரும் நாட்களில் பா.ஜனதா தனது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும். வருகிற 8-ந் தேதி பெங்களூருவில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு எடியூரப்பா மங்களூரு செல்கிறார். அங்கு கொலையான தீபக் ராவ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story