பேசின்பிரிட்ஜ் பணிமனையில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


பேசின்பிரிட்ஜ் பணிமனையில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Jan 2018 4:15 AM IST (Updated: 6 Jan 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

பேசின்பிரிட்ஜ் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெட்டியில் உள்ள பேட்டரியில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.

சென்னை, 

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வெளியூர்களில் இருந்துவரும் ரெயில்கள் பயணிகளை இறக்கிவிட்டு, காலிப்பெட்டிகளை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் நிறுத்திவைப்பது வழக்கம். அதைப்போல் நேற்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெட்டியில் உள்ள பேட்டரியில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. அங்கு இருந்த ஊழியர்கள் அணைக்க முயற்சித்தும் முடியவில்லை.

தீ அந்த பெட்டி முழுவதும் பரவியதால் பணிமனை ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். வண்ணாரப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த தீவிபத்து குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story