நாயை விட்டு கடிக்க விட்டதுடன் துணை நடிகை-மகன் மீது தாக்குதல் 2-வது கணவரான நடிகர் மீது போலீசில் புகார்
பெங்களூருவில் துணை நடிகை, அவரது மகனை நாயை விட்டு கடிக்க விட்டதுடன், அவர்களை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் துணை நடிகை, அவரது மகனை நாயை விட்டு கடிக்க விட்டதுடன், அவர்களை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 2-வது கணவரான நடிகர் மீது துணை நடிகை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
2-வது திருமணம்
கன்னட திரையுலகில் துணை நடிகையாக இருந்து வருபவர் ராதிகா ஷெட்டி. இவர், தனியார் கன்னட தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் நாடகங்களிலும் நடித்து வருகிறார். நடிகை ராதிகா ஷெட்டிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். அவரது கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில், கன்னட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வரும் அமீத்தை நடிகை ராதிகா ஷெட்டி 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவர்கள் 2 பேரும் ‘நமீதா ஐ லவ் யூ‘ என்ற கன்னட படத்தில் சேர்ந்து நடித்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு இடையே காதல் உண்டானது.
பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் பெற்றோர் சம்மதத்துடன் சிவமொக்காவில் உள்ள கோவிலில் வைத்து அமீத்தும், ராதிகா ஷெட்டியும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு, பெங்களூரு ராஜராஜேசுவரி நகர் அருகே அவர்கள் வசித்து வந்தனர். ஆனால் அமீத்துக்கும், ராதிகா ஷெட்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ முடிவு செய்ததாகவும் தெரிகிறது.
நடிகர் மீது புகார்
இந்த நிலையில், ராஜராஜேசுவரி நகர் போலீஸ் நிலையத்தில் நடிகை ராதிகா ஷெட்டி, 2-வது கணவரும் நடிகருமான அமீத் மீது ஒரு புகார் கொடுத்தார். அதில், “என்னுடன் வாழ பிடிக்காததால் அமீத் சண்டை போட்டு வருகிறார். மேலும் எனது மகனை அமீத் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதுபற்றி கேட்க நானும், எனது மகனும் ஐடியல் ஹோம் பகுதியில் உள்ள அமீத் வீட்டிற்கு சென்றோம். அங்கு வைத்து என்னையும் அடித்து உதைத்து தாக்கினார். மேலும் நாயை ஏவிவிட்டு கடிக்க விட்டார். எனவே அமீத் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,“ என்று கூறி இருந்தார்.
இதுபோல, அமீத்தின் தாயும் தனது மகனை ராதிகா ஷெட்டி கொடுமைப்படுத்தி தொல்லை கொடுப்பதாக கூறி ராஜராஜேசுவரி நகர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, 2 பேரும் கொடுத்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜராஜேசுவரி நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story