கல்பாக்கம் அருகே பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டிகளால் பொதுமக்கள் அவதி


கல்பாக்கம் அருகே பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டிகளால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 6 Jan 2018 3:26 AM IST (Updated: 6 Jan 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கல்பாக்கம், 

கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் ஊராட்சியில் பவுஞ்சூர், விழுதமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. விழுதமங்கலம் பகுதியில் பள்ளிக்கூட தெரு, மாதாகோவில் தெரு, பிள்ளையார்கோவில் தெரு, நியாயவிலைகடை தெரு உட்பட்ட பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள 30- க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் கடந்த சில மாதங்களாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. பவுஞ்சூர் கிராமத்தில் அரசு மேம்படுத்தபட்ட சுகாதாரநிலையம் நுழைவு வாயிலில் உள்ள உயர் கோபுர மின்விளக்கும் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

இதனால் நோயாளிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் விஷ வண்டுகள், தேள், பாம்பு போன்றவற்றால் குழந்தைகளுக்கு எந்த நேரமும் பாதிப்பு ஏற்படலாம் என இந்த பகுதியில் உள்ளவர்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் இந்த பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் நீண்ட காலமாக பராமரிப்பின்றி சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பலமுறை இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு இந்த கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் மின்விளக்குகளை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story