புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக ஓர் உலக சாதனை


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக ஓர் உலக சாதனை
x
தினத்தந்தி 6 Jan 2018 2:00 PM IST (Updated: 6 Jan 2018 1:08 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேல் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக, 118 அடி உயர பிளாஸ்டிக் கோபுரம் ஒன்று உருவாக்கிச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் டெல் அவிவ் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுவனான ஒமர் சயாக், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இச்சிறுவனுக்கு லிகோ நிறுவனத்தின் விளையாட்டுப் பொருட்களை மிகவும் பிடிக்கும்.

இதை அறிந்த ஒமர் சயாக்கின் பள்ளி ஆசிரியர், டெல் அவிவ் நகர மக்களின் உதவியுடன் ஒரு பிரம்மாண்ட பிளாஸ்டிக் கோபுரத்தை எழுப்ப எண்ணினார்.

அதன்படி பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் பலரிடம் இருந்து நிதி திரட்டி, பிளாஸ்டிக் துண்டுகளை வாங்கிச் சேர்த்தார். அவற்றைக் கொண்டு அந்நகர மக்களுடன் இணைந்து பிளாஸ்டிக்கால் ஆன கோபுரம் ஒன்றைக் கட்டி முடித்தார்.

சுமார் 50 ஆயிரம் பிளாஸ்டிக் துண்டுகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு, 118 அடி உயரத்தில் கிரேனின் உதவியுடன் அக்கோபுரம் கட்டப்பட்டது.

பலவகை நிறங்களால் ஆன பிளாஸ்டிக் துண்டுகளால் உருவாக்கப்பட்ட இந்தக் கோபுரத்துக்கு சிறுவனின் பெயரையே சூட்டியிருக்கிறார்கள். மேலும் இது ஒரு புதிய உலக சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Next Story