ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் தொடர் முழக்க போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும், அனைவருக்கும் பொங்கல் போனசாக ஒருமாத ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புறம் நடைபெற்ற இந்த தொடர்முழக்க போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகேசன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லியோ ஜெரால்டு எமர்சன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த போராட்டத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story