கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம்


கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2018 4:30 AM IST (Updated: 7 Jan 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கோரிக் கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாவட்ட ஜாக்டோ - ஜியோ கூட்ட மைப்பு சார்பில் கோரிக் கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் வரவேற்று பேசினார். சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் தொடர்பாக பேசினார்கள். முடிவில், மாவட்ட நிதி காப்பாளர் நாராயணன் நன்றி கூறினார்.

இந்த போராட்டத்தின் போது, உச்சவரம்பின்றி ஒரு மாத ஊதியம் போனசாக அனைவருக்கும் வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்புற நூலகர், பகுதி நேர, தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிட் டோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். பல்கலைக்கழகம், கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதிய மாற்ற உத்தரவினை அமல்படுத்திட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் மற்றும் மறுக்கப்பட்டுள்ள மத்திய அரசுக்கு இணையான படிகளை வழங்கிட வேண்டும். போராடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக் கைகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி ரத்து செய்திட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன. 

Next Story