3.95 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டத்தில் 3.95 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 95 ஆயிரத்து 13 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் தொடக்க விழா தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் உள்ள அதியமான்கோட்டத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி வரவேற்று பேசினார்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில் தமிழகஅரசு ஆண்டுதோறும் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்த திட்டத்திற்காக ரூ.210 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ரூ.4 கோடியே 42 லட்சம் இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகுப்பு அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இதை பெற்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டுகிறோம்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சந்தானம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்கள் டி.ஆர்.அன்பழகன், தொ.மு.நாகராஜன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் பழனிசாமி, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.ரங்கநாதன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், கோபால், வேலுமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செம்மாண்டகுப்பம், பன்னிகுளம், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு தமிழகஅரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

Related Tags :
Next Story