11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2018 3:15 AM IST (Updated: 7 Jan 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்ட ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில், 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆஸ்ரா (ஜியோ) தலைமை தாங்கினார். ஜெயசீலன் (ஜாக்டோ) முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் உச்சவரம்பின்றி ஒரு மாத ஊதியத்தை போனசாக அனைவருக்கும் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்புற நூலகர், பகுதிநேரம், தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆஸ்ரா (ஜியோ) கூறியதாவது:–

இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றம் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் உள்ளன. இதே போல அமைச்சுப்பணியாளர், கண்காணிப்பாளர்கள் பல்வேறு துறையில் உள்ள அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட தொழில்நுட்ப ஊழியர்களின் ஊதியத்திலும் முரண்பாடுகள் உள்ளன. அரசு ஊழியர்களின் இத்தகைய ஊதிய முரண்பாடுகளை களைந்து புதிய ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story