சத்தியமங்கலத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சத்தியமங்கலம்,
போக்குவரத்து ஊழியர்களின் 3–வது நாள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலம் மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கோபி கிளை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சத்தி சம்மேளனத்தின் பொருளாளர் சிவராஜ், செயல் தலைவர் சின்னசாமி, திட்ட ஆலோசகர் நாகராஜ் உள்பட 100 பேர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story