நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது 3 பேர் தப்பி ஓட்டம்
ஒடுகத்தூரில் நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
அணைக்கட்டு,
ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏரிப்புதூர் ஊனைபகுதி மலையில் கடந்த வாரம் சாராய கும்பலை பிடிக்க சென்ற அணைக்கட்டு போலீசாரை சாராய கும்பல் கல்வீசி தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
இதனையடுத்து போலீசாரும், வனத்துறையினரும் ஒரு வாரமாக சாராய கும்பலை பிடிக்க மலைக்கு செல்வதும் அப்போது அந்த கும்பல் தப்பி ஓடுவதும் பின்னர் அதே இடத்தில் சாராயம் விற்பதும் நடந்து வந்தது.
இந்த நிலையில் ஒடுகத்தூர் வனச்சரகர் முரளி மற்றும் வனவர் பிரதீப்குமார் தலைமையிலான வனத்துறையை சேர்ந்த 25 பேர் கொண்ட தனிப்படையினர் நேற்று ஏரிப்புதூர், ஊனை மலையை சுற்றி நின்றனர். மலைக்கு யாராவது செல்கிறார்களா என்று தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது சாராயம் விற்கும் கும்பலுக்கு சாப்பாடு கொண்டு வந்த ஏரிப்புதூர் மலையடிவாரத்தை சேர்ந்த குப்பன் (வயது 34) என்பவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் வலை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து அவரை ஒடுகத்துார் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அவருடன் அல்லேரி மலை கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, பிரகாஷ் சுப்பிரமணி ஆகியோர் இருந்ததாகவும் வனத்துறையினர் வருவதை பார்த்தும் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து வனத்துறையினர் தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story